2 வது முறையாக கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்காகக் கொலிஜியம் பரிந்துரையை இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், முகமது மன்சூர், பசாரத் அலிகான் என்பவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை, அதே நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யக்கோரி, கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. முகமது மன்சூர் என்பவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற நீதிபதி ஜாகீர் அகமதுவின் மகன் ஆவார்.

இந்த இரண்டு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் ஏற்கெனவே மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அப்போது, அவர்கள் மீது உள்ள புகார்களைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசு, பரிந்துரையை நிராகரித்துவிட்டது. எனினும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, முகமது மன்சூர், பசாரத் அலி ஆகியோரையே நியமனம் செய்ய வேண்டும் என மீண்டும் மத்திய அரசிடம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் கொலிஜியத்தின் பரிந்துரையைக் கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, அதை  இன்று நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!