அனுமதி பெற்றுத்தான் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

''ஜெயலலிதா நினைவிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்டப்படுகிறது'' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுவதாக, துரைசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜெயலலிதா நினைவிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்டப்படுகிறது. இதனால், நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டினால்தான் மத்திய அரசின் அனுமதி, மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். ஆனால்,  5,571 சதுர மீட்டருக்கு மட்டுமே நினைவிடம் கட்டப்பட உள்ளது. இந்த மனு, உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், 'இரண்டு வாரத்துக்குள் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறி, வழக்கு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!