`குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'- திலீப் சேர்க்கைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மலையாள நடிகைகள்

பாலியல் வழக்கில் சிக்கிய திலீப், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'-வில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கிய திலீப், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திலீப்

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதை அடுத்து, கேரள திரைப்பட நடிகர்கள் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில்,17 ஆண்டுகளாக  நடிகர் சங்கத் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவி விலகியதை அடுத்து, மோகன்லால் தலைவரானார். மோகன்லால் தலைமையில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக திலீப் நீக்கப்பட்டதாகக் கூறி, அவர் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் இணைக்கப்பட்டதற்கு சினிமா நடிகைகள் கூட்டமைப்பு  (wcc) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகைகள் கூட்டமைப்பு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "நடிகர் சங்கத்திலிருந்து திலீப் எதற்காக வெளியேற்றப்பட்டார்; இப்போது திரும்பவும் அவரை சேர்த்துக்கொள்ள என்ன காரணம்?. பாலியல் தொல்லை சம்பவத்தில் சிக்கி மீண்டு வந்தவர், நமது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளாரே... பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளானவரை விசாரணை முடிவதற்கு முன்பே மீண்டும் இணைப்பதால், உங்களுக்கு குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா" என்பது போன்ற 7 கேள்விகள் நடிகர் சங்கத்துக்கு கேட்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட்டதற்கு எதிராக நடிகைகள் களம் இறங்கியிருப்பது மலையாளத் திரை உலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!