காவிரி மேலாண்மை ஆணையம்; ஒழுங்காற்றுக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தது கர்நாடகா!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடகா.

காவிரி உறுப்பினர்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்தது. மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும் ஒழுங்காற்றுக்குழுவையும் அமைக்கத் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்த நிலையில், கடந்த 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு அமைத்துள்ளதாகக் கூறி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதில் கர்நாடக மாநிலம் சார்பில் பிரதிநிதிகளை அம்மாநில அரசு பரிந்துரைக்காததால் மத்தய அரசு தானாகவே முன்வந்து தற்காலிகப் பிரதிநிதிகளை நியமித்தது. இதற்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு தங்கள் பொறுமையைச் சோதிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கர்நாடக அரசு தானாகவே முன்வந்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் என்பவரையும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கர்நாடக உறுப்பினராகப் பிரசன்னா என்பவரையும் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க 3 நாள்களில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கர்நாடக மாநில எம்.பி-க்களும் கலந்துகொள்வார்கள் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!