வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (26/06/2018)

கடைசி தொடர்பு:08:45 (26/06/2018)

`சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது’ - 92 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைத் தமிழர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் கும்பலை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

போலி

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக மத்தியக் குற்றப்பிரிவைச் சேர்ந்த, போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படையினர், சென்னை திருவல்லிக்கேணியில் நடத்திய சோதனையில், டிராவல்ஸ் நடத்தி வரும் வீரகுமார் (வயது 47) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை தமிழர்களின் உதவியுடன், தமிழ்நாட்டில் உள்ள பயனற்ற பாஸ்போர்ட்-களை விலைக்கு வாங்கி, அதில் உள்ள நபரின் புகைப்படத்துக்குப் பதிலாக அவருக்குத் தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தைப் பொருத்தி, இந்திய பாஸ்போர்ட்களின் பெயரில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 92 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லேப்டாப், பாஸ்போர்ட் தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.