ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது..! அனில் அகர்வாலைச் சந்தித்தப் பின் ராம்தேவ் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது என்று வேதாந்தா நிறுவனர் அனில் அகர்லாவைச் சந்தித்தப் பின் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

பாபா ராம்தேவ்

யோகா கலையைப் பயிற்சிவிப்பதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் லண்டன் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள, அவர் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாபா ராம்தேவ், 'என்னுடைய லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலைச் சந்தித்தேன். தேசக் கட்டுமானத்தில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலமும், பொருளாதாரத்தைச் செழிப்பாக வைத்திருப்பதன் மூலமும், தேசக் கட்டுமானத்தில் பங்காற்றும் அவருக்கு மரியாதை செய்கிறேன். உலகளவிலுள்ள சதிகாரர்கள் தென்னிந்தியாவிலுள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். தேசத்தினுடைய வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில்கள். தொழிற்சாலைகள் மூடியிருக்கக் கூடாது' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!