வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (26/06/2018)

கடைசி தொடர்பு:10:15 (26/06/2018)

லண்டனில் தொடங்கியது சூர்யா - கே வி.ஆனந்த் திரைப்படம். #சூர்யா37

ஒளிப்பதிவாளராக இருந்து 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். அவரும் சூர்யாவும் இணையும் மூன்றாவது திரைப்படம் #சூர்யா37

அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக இணைகிறது சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை லண்டனில் நேற்று நடந்தது. #சூர்யா37 என அழைக்கப்படும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடக்கவுள்ளது

சூர்யா37

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மோகன்லால், சமுத்திரக்கனி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் போமன் இரானி வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

போமன் இராணி | அல்லு சிரிஷ் | சாயீஷா | மோகன்லால் | சமுத்திரக்கனி

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யூ ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் 'என்.ஜி.கே' படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

கே.வி ஆனந்த் | ஹாரீஸ் ஜெயராஜ்