வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:11:00 (26/06/2018)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4-வது யூனிட் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தம்..!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 4-வது யூனிட் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. 

thoothukudi thermal power station

இந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்று. நிலக்கரி அடிப்படையிலான இத்துறைமுகம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் 1 மற்றும் 2-வது யூனிட்டுகளும், இரண்டாம் கட்டமாக 3-வது யூனிட்டும் மற்றும் முன்றாவது கட்டமாக 4 மற்றும் 5-வது யூனிட்டுகள் என இந்த அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

1-வது யூனிட் 1979-லும், 2-வது யூனிட் 1980-லும், 3-வது யூனிட் 1982-லும், 4-வது யூனிட் 1991-லும் மற்றும் 5-வது யூனிட் 1992-லும் தொடங்கி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில், உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைப்பட்டு வருகிறது. சில சமயம், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைப்பட்டு வந்தது. பழைமையான யூனிட்டுகள் என்பதால் அடிக்கடி பராமரிப்புப் பணியும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று 4-வது யூனிட் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன் 2 யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டு உற்பத்தி துவக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பராமரிப்புப் பணிக்காக உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க