வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (26/06/2018)

கடைசி தொடர்பு:11:20 (28/06/2018)

விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்பு..! அமைச்சர் தங்கமணி தகவல்

தட்கல் முறையில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு பெறுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தங்கமணி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துவருகின்றனர். மின்சாரத்துறை விவகாரம் குறித்துப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, 'இந்த நிதியாண்டில் விவசாயத்துக்கு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்பு பெறுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்' என்று தெரிவித்தார். முன்னதாக பாடத்திட்டம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், 'பாடத் திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாடப்புத்தகத்திலிருந்து கி.மு, கி.பி என்று நீக்கப்பட்டது தொடர்பாக இதுவரையில் புகார் ஏதும் வரவில்லை' என்று தெரிவித்தார்.