வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:35 (27/06/2018)

இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு 60% குறைந்தது!

இந்தியத் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்யும் முதலீடு கடந்த மே மாத முடிவில் ஏறக்குறைய 63% குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக உள்ளது.   

இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு கடந்த மே மாதத்தில் 63% குறைந்துள்ளது. 

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவாக்கம், துணை நிறுவனங்களை அமைத்தல், அங்குள்ள  நிறுவனங்களுடன் இணைந்து பொருள்களைத் தயாரித்தல் போன்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்திய நிறுவனங்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த மே மாதத்தில் 63% குறைந்து 117 கோடி டாலராக உள்ளது. கடந்த  ஏப்ரல் மாதத்தில் இந்திய நிறுவனங்களின் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 356 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதலீடு

கடந்த மே மாதத்தில் இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் 36.80 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் 5.79 கோடி டாலரும், டாடா ஹிட்டாச்சி நிறுவனம் 2.66 கோடி டாலரும், வத்வான் குளோபல் கேப்பிட்டல் 1.52 கோடி டாலரும் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. 

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதில் பலவிதமான சிக்கல்கள் இருப்பது ஒருபக்கமிருக்க, இப்போது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலீடும் குறைந்திருப்பது ஆச்சர்யத்தையே அளிப்பதாக உள்ளது!