`துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட எஸ்.சி மக்கள் புகார் அளிக்கலாம்' - தூத்துக்குடி கலெக்டர் | Scheduled caste people can file complaint in commission - Thoothukudi Collector

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (26/06/2018)

கடைசி தொடர்பு:13:40 (26/06/2018)

`துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட எஸ்.சி மக்கள் புகார் அளிக்கலாம்' - தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வரும் 28-ம் தேதி முதல் 3 நாள்கள், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தின்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் வரும் 28-ம் தேதி தூத்துக்குடிக்கு வர இருக்கிறார்கள்.

இந்த ஆணையம், வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை என 3 நாள்கள் தினமும் காலை 11 மணிக்கு ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான விசாரணை வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு, தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த விசாரணையின்போது, உயிரிழந்த தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகள், கோரிக்கைகளைப் பதிவு செய்யலாம் என இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க