பொறியியல் கலந்தாய்வு எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி விரைவில் வெளியாகும் என பொறியியல் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள 2,60,000 பொறியியல் காலி இடங்களில், 1,90,000 இடங்கள் அண்ணா ரைமண்ட்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.

இந்த வருடம் முதல் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், வரும் ஜீன் 28-ம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்துப் பேசிய அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் ரைமண்ட் உத்திரியராஜ், “ஜூன் 28-ம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வுக்கான அதிகாரபூர்வ தேதிகள் இன்னும் ஆலோசிக்கப்படவில்லை. ஜூலை 7 என்பது உத்தேசமாக இருக்கலாம் என முன்னதாக அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னர்தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!