வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:14:00 (26/06/2018)

அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!

அணைப் பாதுகாப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் ஒத்தமனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!

இந்தியா முழுவதும் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலுள்ளது என்று தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

இந்த மசோதாவை செயல்படுத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அந்த மசோதாவில், 'அணைப் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. மாநில அரசுகளிடம் உரிய முறையில் ஆலோசனை நடத்திய பின்னரே மசோதாவை செயல்படுத்த வேண்டும். அதுவரையில் அந்த மசோதாவை  நிறுத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.