லதா ரஜினிகாந்த் பள்ளியில் பணியாற்றியவர் உயிரிழப்பு!

ஆசிரமம் பள்ளி

 சென்னை சைதாப்பேட்டையில் லதா ரஜினிகாந்த் நடத்திவரும் பள்ளியில் பணியாற்றிய தோட்டக்காரர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 

ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை வேளச்சேரி, சைதாப்பேட்டை பகுதிகளில் ஆசிரமம் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை நடத்திவருகிறார். சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள பள்ளியில், மதுராந்தகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சில ஆண்டுகளாகத் தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது அவர் மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அங்குள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக ஆறுமுகம், 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!