‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ - நீதிபதி கிருபாகரன் கருத்து | Need to end heir politics in tamilnadu says justice kirubakaran

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (26/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (26/06/2018)

‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ - நீதிபதி கிருபாகரன் கருத்து

'தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம்

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சுப்பையா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்து இருந்தால்தான் ஒரு கட்சியைப் பதிவுசெய்ய முடியும் என்ற விதி வேண்டும். நில அபகரிப்புக்கு வாய்ப்புக் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்' எனக் கூறினார். மேலும், 'தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மருத்துவச் சான்றிதழை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?' எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், 'தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.    1967-ம் ஆண்டு முதல் சினிமா துறையினர்தான் தமிழகத்தை ஆட்சிசெய்து வந்துள்ளனர். அரசியலில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவற்களுக்குக் கிடைத்த வரவேற்பு, தற்போதுள்ள நடிகர்களுக்குக் கிடைக்கவில்லை. டி.என் சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர்திருந்தங்களைத் தேர்தல் ஆணையம் தொடர வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.