வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (26/06/2018)

மும்பையிலிருந்து ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ தங்கம்! - குமரி எல்லையில் சிக்கியது

மும்பையில் இருந்து ரயில் மூலம்  கடத்திவரப்பட்ட 5 கிலோ தங்கத்தை பாறசாலை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

தங்கம்

மும்பையிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் 5 கிலோ தங்க நகைகளைக் கடத்திவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்தாபன் குமார், பவன்லம்பா ஆகியோர், இன்று கைதுசெய்யப்பட்டனர். குமரி எல்லையான பாறசாலை ரயில் நிலையத்தில், மும்பை ரயிலை சோதனையிட்ட ரயில்வே போலீஸார், எஸ் 3 பெட்டியில் இருக்கையின் அடியில் டிராவல் பேக்குகளில் வளையல், மாலை என ஆபரணங்களாகக் கடத்தப்பட்ட தங்கத்தைக்  கண்டுபிடித்துப் பறிமுதல்செய்தனர். எந்தவித ஆவணமும் இல்லாத அந்தத் தங்கத்தின் மதிப்பு 1.30 கோடி ரூபாய் என ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

தங்கம்

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் ரயில்வே போலீஸார் மற்றும் ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். மும்பை - கன்னியாகுமரி ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக திருவனந்தபுரம் ரயில்வே எஸ்.பி மெரின் ஜோசப்புக்கு  ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்தே, தனிப்படை போலீஸார் பாறசாலை ரயில் நிலையத்தில் வைத்து ரயிலில் அதிரடிச் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.