வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (26/06/2018)

கடைசி தொடர்பு:21:19 (26/06/2018)

மாரி - 2 ஷூட்டிங் நிறைவு!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிடப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இரண்டாவது பாகத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது. காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.

மாரி 2

மேலும், வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் 'அராத்து ஆனந்தி' என்ற ஆட்டோ ஓட்டும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஹீரோ தனுஷுக்கும் வில்லன் டோவினோ தாமஸுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பில் தனுஷுக்குக் காயம் ஏற்பட்டது. ஆனால், தனக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனத் தனுஷ் விளக்கமளித்திருந்தார். இதனால், ஒரே ஒரு பாடல் காட்சி தவிர அனைத்துப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதை விரைவில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க