வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (26/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (26/06/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.2.30கோடி!

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் இம் மாத உண்டியல் வசூல் ரூ.2கோடியே 30 லட்சத்து, 33 ஆயிரத்து 141 ஆகும். இத்துடன் 2,270 கிராம் தங்கம், 22,482 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது என திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.

richendur subramaniya swamy kovil

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இக் கோவியில் ஒவ்வொரு மாதமும், 14ம் தேதி மற்றும் 26-ம் தேதி என இரண்டுமுறை   திருக்கோயில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இங்கு, பக்தர்களின் காணிக்கை உண்டியல், கோசலை பராமரிப்பு உண்டியல், திருக்கோயிலில் உள்ள வள்ளி யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் என, 30-க்கும் மேற்பட்ட  உண்டியல்கள் உள்ளன. தற்போது மேல கோபுர திருப்பணிக்கு என ஒரு உண்டியலும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் கூறுகையில், ”சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த  14-ம் தேதி எண்ணப்பட்ட, பக்தர்களின் காணிக்கை  உண்டியலில் மூலம், ரூ.1கோடியே 60 லட்சத்து, 49 ஆயிரத்து 823 ரொக்கப்பணம் கிடைத்தது. இன்று (26.06.18) இரண்டாவது முறையாக  உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் பக்தர்களின் காணிக்கை உண்டியல் மூலம், ரூ.61,00,365., வள்ளி யானைப் பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.23,424., கோசாலைப் பாராமரிப்பு உண்டியல் மூலம், ரூ.52,523., மேல கோபுரத்திருப்பணி உண்டியல் மூலம், ரூ,1,97,191, அன்னதான உண்டியல் மூலம், ரூ.5,90,646, வைகாசி விசாக திருவிழா உண்டியல் மூலம் ரூ.19,169 என மொத்தம்  ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 318 கிடைத்துள்ளது. கடந்த 16-ம்  தேதி கிடைக்கப்பெற்ற  ரூ.1 கோடியே 60 லட்சத்து, 49 ஆயிரத்து 823 ரொக்கப்பணமும் சேர்ந்து இம் மாதத்தின் மொத்த உண்டியல் வசூல், 2 கோடியே,30 லட்சத்து, 33,141 ஆகும். இத்துடன் உண்டியலில் காணிக்கையாக வந்த மொத்த தங்கம், 2,720 கிராம், 21,482 கிராமம் வெள்ளியும் மற்றும் 418 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

திருக்கோயில் இணை ஆணையர் பாரதி  மற்றும் உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 150 கோவில் பணியாளர்கள் மற்றும், 150 உழவாரப் பணித் தொண்டர்கள் என, மொத்தம் 300 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க