வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (26/06/2018)

கடைசி தொடர்பு:21:48 (26/06/2018)

உலகக்கோப்பையின் முதல் கோல் லெஸ் மேட்ச்... பிரான்ஸ் - டென்மார்க் ஆட்டம் டிரா! #DENFRA

கடைசி பத்து நிமிடத்தில் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு ஒரு பிரேக்த்ரோ கிடைக்கவில்லை. ஃபீல்டு கோலுக்கு வாய்ப்பில்லாத சமயத்தில், செட் பீஸ் கிரியேட் செய்து கோல் அடிக்கவும் முயற்சிக்கவில்லை.

ரஷ்யாவில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில், 38 போட்டிகளுக்குப் பின் முதன்முறையாக ஒரு போட்டி கோல் லெஸ் டிராவில் முடிந்தது. பிரான்ஸ், டென்மார்க் இரு அணிகளும் 90 நிமிடங்கள் போராடியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இருப்பினும், இந்த ரிசல்ட் இரு அணிகளும், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறுவதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. #DENFRA

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ், டென்மார்க் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டி மாஸ்கோவில் உள்ள லஸ்னிகி ஸ்டேடியத்தில் நடந்தது. பிரான்ஸ் ஏற்கெனவே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால், அணியில் ஏழு மாற்றங்களைச் செய்திருந்தார், பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். 

#DENFRA

ஆரம்பத்திலிருந்தே பிரான்ஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தாலும், 24-வது நிமிடத்தில் பாக்ஸில் இருந்த டென்மார்க் வீரர் ஜன்கா கையில் பந்து பட்டது. ஆனால், ரெஃப்ரி அதை கவனிக்கவில்லை. இதனால், பிரான்ஸுக்கு பெனால்டி கிடைக்கவில்லை. கிரிஸ்மன் அட்டகாசமாகக் கொடுத்த பாஸ்களை டெம்பெலே, ஜிராடு சரியாக கனெக்ட் செய்யவில்லை. 44-வது நிமிடத்தில் கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பை, ஜிராடு வீணடித்தார். அடித்திருந்தாலும் அது கோலாக வாய்ப்பில்லை. ஏனெனில் கிரிஸ்மன் ஆஃப் சைடில் இருந்தார்.

முதல் பாதி முடிவதற்கு முன், இஞ்சுரி டைமில் கவுன்டர் அட்டாக்கிங்கில் ஈடுபட்டபோது, கிரிஸ்மனை ஃபவுல் செய்ததற்காக, டென்மார்க் வீரர் ஜங்கா புக் செய்யப்பட்டார். முதல் பாதி முடிவில், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்பும் பிரான்ஸ் அட்டாக்கிங் எடுபடவில்லை. ஒருவேளை இந்த மேட்ச் கோல் லெஸ் டிராவில் முடியுமோ என்ற சந்தேகம் எழுந்தது. கிரிஸ்மனுக்குப் பதிலாக களமிறங்கிய ஃபெகிர் 70-வது நிமிடத்தில் 25 யார்டு பாக்ஸுக்கு வெளியே இருந்து லெஃப்ட் ஃபுட்டில் லாங் ரேஞ் ஷாட் அடித்தார். அது, சைடு நெட்டில் விழுந்தது. இன்னும் 15 நிமிடங்களே இருப்பதால், எப்படியும் கோல் அடிக்கும் முனைப்பில் டெம்பெலேக்கு பதிலாக எம்பாபேவை இறக்கினார் பிரான்ஸ் பயிற்சியாளர்.

#DENFRA

கடைசி பத்து நிமிடத்தில் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு ஒரு பிரேக்த்ரோ கிடைக்கவில்லை. ஃபீல்டு கோலுக்கு வாய்ப்பில்லாத சமயத்தில், செட் பீஸ் கிரியேட் செய்து கோல் அடிக்கவும் முயற்சிக்கவில்லை. பிரான்ஸ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிவிட்ட  அலட்சியத்தில்  விளையாடியது போலவே தெரிந்தது. கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் கோல் லெஸ் டிராவில் முடிந்தது.

இருப்பினும், குரூப் சுற்று முடிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரான்ஸ், 5 புள்ளிகளைப் பெற்ற டென்மார்க் ஆகிய இரு அணிகளும்  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இந்த குரூப்பில் இடம்பெற்றிருந்த மற்ற இரு அணிகளான ஆஸ்திரேலியா, பெரு  உலகக் கோப்பையில் இருந்து வெளியேறின.

நீங்க எப்படி பீல் பண்றீங்க