கோயிலுக்குச் சென்றால் முதல்வராக முடியாது..! ஸ்டாலினைத் தாக்கும் ஜெயக்குமார்

ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள் நினைத்தால்தான் முதலமைச்சராக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `பட்டினப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு, பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது. தி.மு.க-வுடன் எங்களுக்கு கூட்டு கிடையாது. வாழ்நாள் முழுவதும் எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தி.மு.க எதிர்ப்பு எங்களுடைய ரத்தத்தில் கலந்தது.

அது எப்போதும் தொடரும். பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க கொள்கை என்ன என்பது தெரியவில்லை. கோயிலுக்குச் செல்வது நல்ல விஷயம்தான். ஆனால், இரட்டை வேடம் போடக் கூடாது. ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றால் முதலமைச்சராகிவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள் நினைத்தால்தான் முதலமைச்சராக முடியும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!