இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்த வாலிபர் கைது; படகு பறிமுதல்..! க்யூ பிரிவு போலீஸார் அதிரடி..!

உச்சிப்புளி அருகே இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்த ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். படகை கைப்பற்றிய போலீஸார் தப்பி ஓடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

உச்சிப்புளி அருகே இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்த ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். படகை கைப்பற்றிய போலீஸார் தப்பி ஓடிய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

உச்சிப்புளி அருகே கடற்கரையில் க்யூ பிரிவு போலீஸார் கைபற்றிய படகு

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தமிழகத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் போதைப் பொருள்களான கஞ்சா, மாத்திரைகள், பீடி பண்டல்கள், ரசாயனப் பவுடர்கள் ஆகியன கடத்திச் செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.  

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கச்சிமடத்தில் போராளி இயங்கங்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடி பொருள்கள் சிக்கின. இவற்றைக் கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உச்சிப்புளி அருகே உள்ள வலங்கைமான் கடற்கரையில் கள்ளத்தனமாக படகில் வந்த இலங்கை ஆசாமியைக் கைது செய்தனர்.

இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சகாய ஸ்டீபன் என்ற கான்டீபன் என்ற அந்த ஆசாமியுடன் மேலும் இருவர் வந்துள்ளனர். இவர்கள் கள்ளத்தனமாக வந்த பைபர் படகினையும் அதில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜினையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். மேலும், தப்பி ஓடிய இரு ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்த இவர்கள் தங்கம் கடத்தி வந்தார்களா அல்லது இங்கிருந்து இலங்கைக்கு பொருள்களைக் கடத்திச் செல்ல வந்தார்களா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!