வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (27/06/2018)

கடைசி தொடர்பு:12:30 (27/06/2018)

போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்..! ராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் அசத்தல் முயற்சி

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

போதைப் பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.

உலக அளவில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை உருவாக்கவும், போதைப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் 26-ம் தேதியை சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறது.

இதையொட்டி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து பெறும் இயக்கத்தைத் தொடங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தானவேலு தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கருணாகரன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல்நலக் குறைவு குறித்து உரையாற்றி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஒரு வருடம் முழுவதும் நடத்தப்படும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பெறப்படும் கையெழுத்துகள் பாரிஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நகரின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கருணாகரன், களஞ்சியம், முருகன் மற்றும் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.