பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் செய்த கொடுமை..! | 5 priests accused of sexually abusing woman, suspended in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (27/06/2018)

கடைசி தொடர்பு:11:50 (27/06/2018)

பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் செய்த கொடுமை..!

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை

பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் செய்த கொடுமை..!

கேரளாவில் பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். 

பாலியல் வன்கொடுமை

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த பெண்ணின் கணவர் ஒருவர் அங்குள்ள மலகங்கா ஆர்தோடெக்ஸ் ஆலய நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில், ``ஒருவர் பாவமன்னிப்புக் கேட்டதை மற்றொருவரிடம் சொல்லக் கூடாது. என் மனைவி கேட்ட பாவமன்னிப்பை வைத்து அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 5 பாதிரியார்கள் பல ஆண்டுகளாக என் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். என் மனைவி இதை என்னிடம் இப்போதுதான் தெரிவித்தார். அந்தப் பாதிரியார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். 

குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியார்களில் நான்கு பேர் கேரளாவையும் இன்னொருவர் டெல்லியையும் சேர்ந்தவர்கள். புகார் கடிதம் வந்ததையடுத்து இவர்கள் 5 பேரையும் ஆலய நிர்வாகம் விடுப்பில் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்யப்படவில்லை. ஆலய தரப்பில் இருந்து பெண்ணின் கணவரிடம் சமாதானம் பேசும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பாதிரியார் ஒருவரிடம் அந்தப் பெண் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்பைக் கேட்ட பாதிரியார் மற்ற பாதிரியார்களிடம் அந்தப் பெண் குறித்து கூறியுள்ளார். ஐந்து பாதிரியார்களும் அந்தப் பெண்ணை பல முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க