"சவுண்டு குறைச்சுக்கங்க பாஸ்... லைஃபுக்கு நல்லது!" நடிகர் ஜெய்யின் போலீஸ் வைரல் வீடியோ

நடிகர் ஜெய்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் அதிக சத்தம் எழுப்பிய காரில் வந்த நடிகர் ஜெய்யை போக்குவரத்துப் போலீஸார் மடக்கினர். பிறகு, அவரே, 'அதிக ஒலி எழுப்பும் காரில் வராதீர்கள்' என்று பொதுமக்களுக்கு அட்வைஸ் செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது. 

நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் நடிகர் ஜெய் நேற்றிரவு காரில் சென்றார். காரை அவரின் டிரைவர் ஓட்டினார். காரிலிருந்து அதிக சத்தம் வந்தது. இதனால், போக்குவரத்துப் போலீஸார் காரை மடக்கினர். காரிலிருந்து வெளியில் வந்த அவரிடம்  'உங்களின் காரிலிருந்து அதிக சத்தம் வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்' என்று போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

இதையடுத்து நடிகர் ஜெய், பொதுமக்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில் டிரைவரிடம்,  "சார்... காரை கொஞ்சம் ரெய்ஸ் பண்ணுங்க..' என்று  சொல்கிறார். அப்போது காரிலிருந்து அதிக சத்தம் கேட்கிறது. தொடர்ந்து அந்த வீடியோவில் அவர், ``இது என்னுடைய கார்தான். இந்தக் காரிலிருந்து அதிக சத்தம் வருகிறது. இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்தினால் முதலில் அதை போலீஸார் பறிமுதல் செய்வார்கள். எனவே, அதிக ஒலி எழுப்பும் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். காரிலிருந்து வரும் சத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்கிறார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டியதாக நடிகர் ஜெய் மீது போக்குவரத்துப் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அவரின் லைசென்ஸ் ஆறு மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!