நிரவ் மோடியைக் கண்காணிக்க 3 நாடுகளின் உதவி கோரும் இந்தியா!

இந்திய வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நிரவ் மோடியைக் கண்காணிக்க மூன்று நாடுகளின் உதவியைக் கேட்டுள்ளது இந்தியா.

நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,000 கோடி கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடி. வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நிரவ் மோடி மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. பின் நிரவ் மோடியின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன. இது இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் நிரவ் மோடி பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்தது மும்பை சிறப்பு நீதிமன்றம். இதைத்தொடர்ந்து நிரவ் மோடியை நாடு கடத்த உத்தரவு பிறபிக்க வேண்டும் என்றும் இதற்காக மூன்று நாடுகளிடம் உதவி கேட்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நிரவ் மோடியைக் கண்காணிக்க இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது இந்தியா. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மூன்று நாடுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!