டீசன்ட் லுக்கில் வந்து பல்ப் திருட்டு... வைரலாகும் சிசிடிவி வீடியோ!

கோவையில், டீசன்டாக லுக்கில் இருக்கும் ஒருவர், பல்பை திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பல்ப் திருடன்

அதிகாலை நேரம்... மிகவும் டீசன்டான லுக்கில் இருக்கும் ஒருவர், சாலை ஓரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். திடீரென அங்கிருக்கும் பல்ப் ஒன்றைப் பாக்கெட்டில் போட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். கோவை, சித்ரா அருகே நடந்த இந்தச் சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிவிடுகிறது. கடந்த சில நாள்களாக இணையதளத்திலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை சித்ரா அருகே உள்ள ஓர் டயர் கடைக்குச் சொந்தமான பல்ப்பைத்தான், அவர் திருடிச் சென்றார்.

டீசன்டான லுக்கில் இருக்கும் ஒருவர் எதற்காக இப்படிச் செய்தார் என்ற சந்தேகம் எழுந்தது. திருடு போன பல்ப்பின் மதிப்பு ரூ.1,000 என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பல்ப்பில் கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்தப் பகுதியில் தொடர்ந்து பல்ப்புகள் திருடு போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பல்பைத் திருடிச் சென்றவர் பெரிய செல்வந்தர் என்றும், இந்த வீடியோ வைரலான பிறகு, அவர் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் மன்னிப்புக் கேட்டு, பல்புக்கான தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!