`எடப்பாடியும் பன்னீரும் மருது சகோதரர்கள்’ - பேரவையில் அமைச்சர் உதயகுமார் புகழாரம்! | `EPS and OPS are Maruthu Brothers, compares Minister Udayakumar

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (27/06/2018)

கடைசி தொடர்பு:19:40 (27/06/2018)

`எடப்பாடியும் பன்னீரும் மருது சகோதரர்கள்’ - பேரவையில் அமைச்சர் உதயகுமார் புகழாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மருது சகோதரர்கள்போல தங்களை வழிநடத்தி வருவதாக அமைச்சர் உதயகுமார் புகழாராம் சூட்டினார்.

உதயகுமார்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அந்த வரிசையில் இன்று வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. மானியக்கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அதில் `தமிழகத்தில் 60 லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் உள்ள 7.5 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண்ணை அள்ள அரசு அனுமதி அளித்ததன் மூலம் விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குடிமராமத்து நாயகன் எனப் புகழ்கின்றனர். மேலும் கரிகாலச் சோழனாகவும் பார்க்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், மருது சகோதரர்கள்போல முதல்வரும் துணை முதல்வரும் எங்களை வழிநடத்திச் செல்கின்றனர்' என அவர் பேரவையில் புகழ்ந்து பேசினார்.