`பட்டினப்பாக்கம் மக்களுக்கு அரசு உதவ வேண்டும்!’ - நடிகர் விஷால் கோரிக்கை

பட்டினப்பாக்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும் என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஷால்

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் சாலையில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலிக்கு வந்த புகாரையடுத்து அதன் தலைவர் கமல்ஹாசன் பட்டினப்பாக்கத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறினார். மேலும், இவர்களுக்கு உடனடியாக மாற்று வீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கமல் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு, தற்போது இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் பட்டினப்பாக்கம் மக்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்தால் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக, மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!