வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (28/06/2018)

கடைசி தொடர்பு:01:00 (28/06/2018)

சிவகார்த்திகேயன் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் `விஜய் ஹீரோயின்’!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், `சீமராஜா’ படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார்.  `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். தமிழில் அதிகம் சொல்லப்படாத சயின்ஸ்-பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சர்வதேச கிராஃபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரியவுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய முத்துராஜ் கலையமைப்பு வேலைகளை மேற்கொள்கிறார். `ரெமோ', 'வேலைக்காரன்' படத்தைத் தயாரித்த ஆர்.டி.ராஜசேகர் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். 

சமீபகாலமாக நெட்டிசன்களிடையே ட்ரெண்டாகியள்ள யோகிபாபு காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், பானுப்ரியா, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்யுடன் `நெஞ்சினிலே', விஜயகாந்த்துடன் `நரசிம்மா’ ஆகிய படங்களில் நடித்த இஷா கோபிகர் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி  கொடுக்கவுள்ளார். அவர் நரசிம்மா படத்துக்குப் பின் தமிழில் வேறு படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.