`காதில் பூ; கழுத்தில் மண்டையோடு படங்கள்!’ - நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அதிரவைத்த மக்கள் | Cuddalore people staged bizarre protest over various demands

வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (28/06/2018)

கடைசி தொடர்பு:01:45 (28/06/2018)

`காதில் பூ; கழுத்தில் மண்டையோடு படங்கள்!’ - நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அதிரவைத்த மக்கள்

சாலையைச் சீரமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்துப் பொது நல இயங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் காதில் பூவுடனும் மண்டையோடு படங்களுடனும் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.  

 கடலூர்

அந்த மனுவில், ``கடலூர் ஜவான் பவன்-கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையை உடனே புதுப்பித்து தர வேண்டும். கடலூர் -நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் செம்மண்டலம் நான்கு வழிச்சாலை இணைப்பில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும். 2000-மாவது ஆண்டின் குறியீட்டின்படி கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றி அகன்ற சாலையாக மாற்றித் தர வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை, கடலூர் வண்டிப்பாளையம் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. அப்போது, இணை ஒருங்கிணைப்பாளர்கள் குருராமலிங்கம், சுப்புராயன், சிவாஜி கணேசன் மற்றும் பேராசிரியர் அர்த்தநாரி, மாற்றுத்திறனாளி சங்கத்தைச் சேர்ந்த சையது முஸ்தபா உட்பட பலரும் கலந்துகொண்டனர். கடலூர் அனைத்துப் பொது நல இயங்கங்களின் கூட்டமைப்பினர் காதில் பூவுடனும் மண்டையோடு படங்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.