ஜூலை இறுதியில் வெளியாகிறது குரூப் - 4 தேர்வு முடிவுகள்! | group-4 exam results will declared in July: TNPSC

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (28/06/2018)

கடைசி தொடர்பு:08:07 (28/06/2018)

ஜூலை இறுதியில் வெளியாகிறது குரூப் - 4 தேர்வு முடிவுகள்!

ஜூலை மாதம் கடைசி வாரத்தில் குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

ஜூலை

கடந்த பிப்ரவரி மாதம், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சுப் பணியாளர் உள்ளிட்ட 9 ஆயிரத்து 351 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகளைத் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதேபோல குரூப் 1 தேர்வுகளை எழுதியவர்களும் தங்களது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். தேர்வு எழுதி 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், 'குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் வெளியாகும்' என டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, குரூப் -1  தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.