கொலை ஓரிடத்தில்... உடல் வேரிடத்தில்... பிரபல ரவுடி தேஜாவுக்கு நடந்த பயங்கரம்! | Rowdy Teja murdered and 5 peoples surrendered

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/06/2018)

கடைசி தொடர்பு:07:45 (28/06/2018)

கொலை ஓரிடத்தில்... உடல் வேரிடத்தில்... பிரபல ரவுடி தேஜாவுக்கு நடந்த பயங்கரம்!

பெரம்பலூரில் பிரபல ரவுடி தேஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் தொடர்கொலை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். 

ரவுடி தேஜா

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள விஸ்வாம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்தவர் தேஜா என்கிற பாஸ்கர். பெரம்பலூர் மற்றும் கோணேரிபாளையம் பகுதியில் வசித்து வரும் இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் மீது பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த தேஜாவை சிலர் காரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் தந்தை கருப்பையா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ரவுடி தேஜா

இந்நிலையில் இன்று மதியம் பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஏரியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக ஆடு மேய்க்கும் ஒருவர் போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பெரம்பலூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். 

உடல் கிடந்த இடம்

வழக்கை விசாரித்து வரும் போலீஸார், ``முதற்கட்ட விசாரணையில் சொந்த ஊரில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவுடி தேஜாவை வேறு ஒரு இடத்தில் வைத்து கொலை செய்து உடலை எளம்பலூர் ஏரியில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தேஜா அவரின் சொந்த ஊரான விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தார் பல முறை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால், கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எங்கு தேடியும் கிடைக்காததால் பிறகு காவல்நிலையத்தில் காணவில்லை என்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் முழுமையாக விசாரித்தால் முழு தகவலும் வெளிவரும்" என்று முடித்துக்கொண்டனர்.