வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (28/06/2018)

கடைசி தொடர்பு:13:39 (28/06/2018)

சென்னையில் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பதிவு!

மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவியின் குரல் மாதிரி சென்னையில் பதிவு செய்யப்பட்டது. 

நிர்மலா தேவி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளைத் தவறானப் பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 17-ம் தேதி  கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது.

நிர்மலாதேவியின் குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை தடய  அறிவியல் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிர்மலா தேவியை சென்னை அழைத்துச் செல்ல மூன்று நாள்கள் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்.

அதன்படி நேற்று காலை மதுரையில் இருந்து சென்னை  அழைத்துவரப்பட்டார் நிர்மலாதேவி. இன்று காலை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்தில் அவரின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது. நிர்மலாதேவியின் தொலைபேசி  உரையாடலுடன் ஒப்பிட இந்தக் குரல் மாதிரி பதிவு செய்யப்படுகிறது.