வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:12:20 (28/06/2018)

கோயில் விழாவில் பூக்குழி இறங்கச் சென்றவர்கள்மீது கும்பல் தாக்குதல்!

கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்க சென்றவர்கள் மீது

கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கச் சென்றவர்கள் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம், சமயநல்லூர் அருகே மூலக்குறிச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயில் திருவிழாவில் தாக்குதல்


மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகிலுள்ள மூலக்குறிச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கச் சென்ற ஒரு தரப்பு மக்கள் மீது மற்றொரு தரப்பினர்  கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சாதியை காரணம் காட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு தலையிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலர் பலத்த காயத்துடன் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மூவேந்தர் புலிப்படை நிர்வாகிகள் சென்று பார்த்தனர்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மூலக்குறிச்சியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு இந்த ஊரைச் சேர்ந்த போலீஸ் ஒருவர்தான் காரணம் என்று சிலரால் குற்றம்சாட்டப்படுகிறது. `மதுரை மாவட்ட எஸ்.பி, இந்தப் பிரச்னையில் உடனே தலையிட்டு, விசாரித்து நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட  வேண்டும்' என்கிறார்கள் கிராம மக்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க