`பாலியல் புகார் கூறியதால் பழிவாங்கப்படுகிறேன்'- கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த ஆசிரியர்!

ரசு உதவிபெறும் பள்ளியில் வேலை செய்து விருப்ப ஓய்வுபெற்ற ஆசிரியருக்குப் பணபலன் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை எனவும், கந்துவட்டிக்கொடுமை இருப்பதாகவும் கூறி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விஷம் குடித்த ஆசிரியர்!

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் நாகர்கோவிலில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று 15 மாதங்கள் ஆகியும் பணபலன் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை எனக் கூறி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்க வந்திருந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் கூறியதால், தான் பழிவாங்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்த அவர் ஓய்வூதியம் பெறுவது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் சிலருக்கு லஞ்சம் கொடுத்திருந்ததாகவும், கந்துவட்டிக் கும்பல் மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விஷம் குடித்த ஆசிரியர்

மனு கொண்டுவந்திருந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் லாரன்ஸ், மறைத்து எடுத்து வந்த விஷத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென குடித்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து செயல்பட்டு விஷத்தை தட்டிவிட்டனர். இருப்பினும் அவர் சிறிதளவு விஷம் குடித்துவிட்டதால் உடனடியாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நேசமணி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!