`கரிகாலன், மருது சகோதரர், சூறாவளி' - பட்டங்களால் அதிர்ந்த தமிழக சட்டப்பேரவை!

சட்டப்பேரவையில் இன்று, அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், `சூறாவளி முதலமைச்சர்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புனைபெயர் சூட்டினார்.

கரிகாலன்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. பேரவை தொடங்கியதும், கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. கேள்வி நேரத்தில், தொகுதி சார்ந்த பிரச்னைகுறித்து அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ-க்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, 'ஜீரோ - ஹவர்' ஒதுக்கப்பட்டது.

சட்டப்பேரவை

 

இதைத்தொடர்ந்து, மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய சங்ககிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ., ராஜா, முதல்வர் எடப்பாடியைப் புகழ்ந்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், `ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிய முதல்வர் எடப்பாடியார்; பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து, சுற்றுச்சூழலைக் காத்த சூறாவளி முதலமைச்சர்’ என்று புகழாரம் சூட்டினார். சட்டமன்ற உறுப்பினரின் பேச்சைக் கேட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மேசையைத் தட்டி புனைப்பெயரை வரவேற்றனர். இதேபோல நேற்று, பதிலுரை வாசித்தபோது அமைச்சர் உதயகுமார், `முதலமைச்சரும், துணை முதல்வரும் மருது சகோதரர்கள் போல எங்களை வழிநடத்துகின்றனர்; இதேபோல குடிமராமத்து நாயகன்; கரிகாலன்’ என முதல்வருக்கு சட்டப்பேரவையில் பட்டம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!