வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:22:09 (28/06/2018)

`நடிகர் சங்க நிலமோசடி விவகாரம்' - சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு!

நடிகர் சங்க நில மோசடிப் புகார் தொடர்பாக நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள 29 சென்ட் நிலத்தை, அப்போது நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மற்ற உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் முறைகேடாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடிகர் விஷால், காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். புகார் அளித்து நீண்ட நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் முகாந்திரம் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், நில அபகரிப்புப் புகார் தொடர்பாக நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.