கோவையில் ஒரே நாளில் 1,100 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்..! | Coimbatore: 1,100 KG Gutka products seized

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (28/06/2018)

கோவையில் ஒரே நாளில் 1,100 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்..!

கோவையில், ஒரே நாளில் 1,100 கிலோ எடைகொண்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

கோவை குட்கா

கோவையில், தடை செய்யப்பட்ட குட்கா குறித்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ராஜவீதியில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படுவதாக  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு ரகசியத் தகவல் வந்ததயடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய் லலிதாம்பிகை சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். அப்போது, சந்திரா டிரேடர்ஸ் என்கிற கடையில் ஆய்வுசெய்ததில், அங்கு 750 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, ஒப்பணக்கார வீதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதனால், இரண்டு மொத்த விற்பனை குடோன், ஆறு சில்லரை வணிகக் கடைகளில் காலையிலும் மாலையிலும் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 1,100 கிலோ மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சூலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை உற்பத்திசெய்த ஆலை விவகாரத்தில் மர்மங்கள் விலகாத நிலையில், தற்போது கோவையின் மையப் பகுதியிலேயே 1,100 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.