கச்சநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அன்பின் பயணக்குழு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ‘அன்பின் பயணம்’ என்ற அமைப்பின் சார்பாக டெல்லியிலிருந்து வந்திருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்சன்மான்தர், மூத்த பத்திரிகையாளர் ஜான்தயாள்,  சாதிவெறிக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் ராசன் மற்றும் மூவேந்தர் புலிப்படை தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் வையவன் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நடந்தது என்ன என உரையாடினார்கள்.

கச்சநத்தம் சிராமத்தில் அன்பின் பயண்ம் குழுவினர்

அப்போது அவர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள் ``நாங்கள் இந்தக் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு இருக்கிறோம். ஆதிக்கசாதியினர் எங்களைச் சுதந்திரமாக இங்கே வாழவிடமாட்டார்கள். நாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை எங்களுக்கு இல்லை. எங்கள் ஊரில் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. அதில் கரும்பு, வாழை, நெல் பயிரிட்டு வருகிறோம். மாரநாட்டு கண்மாய் தண்ணீர் விவசாயம் செய்ய எங்களுக்கு ஆதிக்க சாதியினர் விடமாட்டார்கள். நாங்கள் பலதடவை ஆதிக்க சாதியினரின் அட்டகாசங்களைப் பற்றி போலீஸில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களின் பொருளாதார வளர்ச்சிப் பிடிக்காத மாற்றுச் சாதியினர் எங்க வீட்டுப் பிள்ளைகளை திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். நாங்கள் இந்த ஊரில் வாழ வேண்டுமானால் எங்கள் ஊரிலேயே ஒரு காவல்நிலையம் அமைக்க வேண்டும். இன்னும் அச்சத்துடன்தான் வாழ்கிறோம். எங்கள் ஊர் பள்ளியில் படித்த பிள்ளைகளைக்கூடப் பாதுகாப்பு கருதி வெளியூரில் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். இந்தப் பள்ளிக்கூடத்தில் யாரும் படிக்க வரவில்லை என்றார்கள். அப்போது அந்த அமைப்பின் சார்பாக வந்திருந்தவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!