கச்சநத்தம் கிராமத்தில் அஞ்சலி செலுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதாகக் குற்றம் சாட்டினார். 

கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே மாதம் பட்டியல் இன மக்கள் மீது அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகன் சுமன் தலைமையிலான கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது, இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் சமாதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கச்சநத்தம் கிராம மக்கள் மீது சந்திரகுமார் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாகவே தாக்குதல் நடத்தி அடிமைப்படுத்தி வைத்ததுடன் ஆவரங்காடு, மாரநாடு கிராமத்தினர் கச்சநத்தம் கிராமத்தினரின் நிலங்களைப் பறிக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் செய்தும் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கச்சநத்தம் கிராமப் பாசன நிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் கால்வாயைக்கூட அடைத்து வைத்து அராஜகம் செய்துள்ளனர். தற்போது அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி தருவதாக வாக்களித்துள்ளது. மேலும், குடிநீர் சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!