விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளர்! | Corporation workers suicide attempt at virudhunagar collector office

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (29/06/2018)

கடைசி தொடர்பு:13:20 (29/06/2018)

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளர்!

விருதுநகர் கலெக்டர் அலுவலக அறை முன்பு துப்புரவுப் பணியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப்பணியாளர் திருநாவுக்கரசு

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு தீர்வு கிடைக்காத பொதுமக்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவர் மீது புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், ஒன்பது வயது மகளுடன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை காரியாபட்டி ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் துப்புரவுப் பணியாளராக வேலைசெய்யும்  திருநாவுக்கரசு என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் உடனே அவரைக் காப்பாற்றினர். தற்கொலைக்கு முயற்சி செய்த திருநாவுக்கரசு தனக்குத் தெரிந்த 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 13,75,000 ரூபாய் வசூலித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கணக்காளராக பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு  அரசுப் பணி வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாலும், கொடுத்தப் பணத்தை  திருப்பித்  தரவில்லை என்பதாலும் திருநாவுக்கரசு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த அந்த அலுவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க