முதல்வருக்கும் ஸ்டாலினுக்கும் நன்றி! - பிரபு பெருமிதம் | Thanks to Stalin and CM, says Prabhu

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (29/06/2018)

கடைசி தொடர்பு:15:08 (29/06/2018)

முதல்வருக்கும் ஸ்டாலினுக்கும் நன்றி! - பிரபு பெருமிதம்

'' 'எனது தந்தை சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்' என்று அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று நடிகர் பிரபு கூறினார்.

பிரபு

நடிகர் சிவாஜிக்கு அக்டோபர் 1-ம் தேதி 90-வது பிறந்தநாள் வருகிறது. அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பிரபுவிடம் கேட்டப்போது, ''ஆளுங்கட்சிக்கும் மகிழ்ச்சி, எதிர்க்கட்சிக்கும் சந்தோஷம். எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரமசந்தோஷம். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு  குடும்பத்திலும் தந்தையாக, தனயனாக, அண்ணனாக, தம்பியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் சட்டமன்றத்தில் அப்பா சிவாஜி குறித்து குரல் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வாகை சந்திரசேகருக்கும், காங்கிரஸ் சார்பில் அப்பாவுக்காக பரிந்துபேசிய சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் என்று தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியினருக்கும் எங்கள் குடும்பத்தின்  சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவாஜி , எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டவர்.  அரசு விழாவாகக் கொண்டாடும் அப்பாவின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம்தேதி  நாங்களும், சிவாஜியின் லட்சக்கணக்கன ரசிகர்களும்  விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்'' என்று நெகிழ்வோடு கூறினார்.  
              

நீங்க எப்படி பீல் பண்றீங்க