ஜூலை 2 முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! மதுரை கலெக்டர் அறிவிப்பு

''ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை, பிளேட், டீ கப்  உள்ளிட்ட 14 பொருள்கள், வரும் ஜனவரி முதல் முற்றிலும் தடை செய்யப்படும்'' என மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் கூறினார்.

தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "மதுரையை மாசில்லா மதுரையாக்கும் நோக்கில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை,  பிளேட், டீ கப்  உள்ளிட்ட 14 பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட உள்ளன . மதுரை மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக, வரும் ஜூலை  2-ம் தேதி  முதல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில்  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, 1.1.19 முதல் மதுரை மாவட்டம் முழுவதும்  தடை செய்யப்படும்'' என்று கூறினார்.

'மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது' என வைகை பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!