மோட்டார் உற்பத்தியில் டாப் 10-ல் தமிழகம்! - எம்.சி.சம்பத் பெருமிதம்

மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழகம் டாப் 10-ல் உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்..

எம் சி சம்பத்

மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் காரசாரமாக நடைபெற்றுவருகிறது. இன்றைய விவாத்தின்போது பேசிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ``கடந்த 2000 - 2010 வரை தமிழகத்துக்கு அந்நிய நேரடி முதலீடாக 33 ஆயிரத்து 24 கோடி ரூபாய் வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011-ல் பொறுப்பேற்ற பின்னர், 2017 வரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 24 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது. மேலும் 1995-ம் ஆண்டு, ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஃபோர்டு கார் நிறுவனம் மற்றும் அதன் தொடர்ச்சியாகத் தொடங்கப்பட்ட பல்வேறு மோட்டார் நிறுவனங்களால் தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மோட்டார் உற்பத்தியின் கேந்திரமாக தமிழ்நாடு செயல்படுகிறது. இந்திய அளவில் டாப் 10ல் தமிழகம் உள்ளது" என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!