’’பிக்பாஸ் ஷுட்டிங்கிற்கு ஃபெப்சி இடையூறு செய்யக் கூடாது!’’ - உயர்நீதிமன்றம் ஆணை

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும், மும்பையில் இருந்து வரும் டெக்னீஷியன்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சென்ற ஆண்டில், இந்தப் பிரச்னை பூதாகரம் ஆனபோது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் குஷ்பு தலையிட்டு, `பேசித் தீர்க்கலாம்’ என அப்போதைக்கு சமாதானம் செய்திருக்கிறார்.   

பிக் பாஸ் 2

இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் நமக்குப் பேட்டியளித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, "  ‘இது வித்தியாசமான செட் அப். தமிழ்நாட்டு டெக்னீஷியன்களுக்குப் புடிபடாது. எனவே 50 % ஆட்களைப் ஃபெப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த  சீசன்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் தமிழ் சினிமாவிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால், இப்போது 10% ஊழியர்கள் மட்டுமே ஃபெப்சி இயக்கித்தினர்!" என்றார். 

ஃபெப்சிக்கும் எண்டமோள் நிறுவனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படும் என ஜூன் 30 -ஆம் தேதி வரை காத்திருக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஃபெப்சி அமைப்பு பிக் பாஸ்-2 நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என இன்று (ஜூன் 29) எண்டமோள் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறது. நீதிபதி சதீஷ் குமார் இந்த இடைக்காக தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். 

ஃபெப்சி சம்மேளனத்தின் உறிப்பினராக இருக்கும் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, ஃபெப்சி சம்மேளனத்தின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!