டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்... உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயி! | Kattumanarkoil farmer gets sucide for bank officer torcher

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (29/06/2018)

கடைசி தொடர்பு:20:45 (29/06/2018)

டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்... உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயி!

கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருந்த தமிழரசன், முறையாகத் தவணை கட்டி வந்த நிலையில், கடைசித் தவணை ரூ.40,000 மட்டும் கட்ட முடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தமிழரசன் வீட்டுக்கு வந்த வங்கி அதிகாரிகள், தவணைப் பணம் கேட்டு அசிங்கமாகத் திட்டி, டிராக்டரை பறிமுதல்செய்து எடுத்து சென்றுள்ளனர். இதனால் அவமானமடைந்த தமிழரசன், விஷம் அருந்தி மயங்கிக்கிடந்துள்ளார்.

டிராக்டரை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அசிங்கமாகத் திட்டியதால் மனவேதனையடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி தமிழரசன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கருணாகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழரசன். விவசாயியான இவர், சிதம்பரத்தில் உள்ள கொடாக்  மகேந்திரா வங்கிக் கிளையில் விவசாயப் பயன்பாட்டுக்காக கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருந்தார். முறையாக தவணை கட்டிவந்த நிலையில், கடைசித் தவணை ரூ.40,000 மட்டும் கட்ட முடியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழரசன் வீட்டுக்கு வந்த வங்கி அதிகாரிகள், தவணைப் பணம் கேட்டு அசிங்கமாகத் திட்டியதோடு, டிராக்டரையும் பறிமுதல்செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அவமானமடைந்த தமிழரசன், விஷம் குடித்து மயங்கிக்கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், அவரை  காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைபெற்றுவந்த தமிழரசன், இன்று காலை உயிரிழந்தார்.

டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் அவமானமடைந்த விவசாயி தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.