8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில், 8 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து, தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 8 பேரில் 4 பேருக்கு கூடுதல் டிஜிபியாகப் பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு

இதுகுறித்து, தமிழக அரசு இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, டிஜிபி-யாக இருந்த அசோக் குமார் தாஸ், தற்போது ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், சென்னை சிஐடி பிரிவுக்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, ஆயுதப்படை டிஜிபி-யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ்வுக்கு தற்போது போக்குவரத்துக் கழக ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு டிஜிபி-யாக இருந்த சு.அருணாச்சலம் தற்போது, ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் மண்டபம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல, சென்னை கிரைம் பிரிவு டிஜிபி-யாக இருந்த தாமரைக் கண்ணனுக்கும் தற்போது கூடுதல் டிஜிபி-யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல, ஏடிஜிபி., ராஜிவ் குமார், ஐபிஎஸ்., மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி., தமிழ்ச்செல்வன், ஏடிஜிபி., எம்.என்.மஞ்சுநாதா உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் வேளையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!