வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:21:33 (29/06/2018)

`பாடத்திட்டத்தில் கி.மு, கி.பி முறையே தொடரும்' - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

தமிழக பாடத்திட்டத்தில் கி.மு, கி.பி என்ற முறையே தொடரும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

செங்கோட்டையன்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. துறை ரீதியாக நிதி ஒதுக்கீடுசெய்வதுகுறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் காரசாரமாக நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று தொழிலாளர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கான மானியக்கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்  போது பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, `கல்வித்துறையில் முன்மாதிரியாக இருக்கவேண்டிய அரசு, கி.மு, கி.பி என்பதை மாற்றியுள்ளது. பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுகளுக்குப் பின் என மாற்றி இருப்பது சிறுபான்மை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறைகுறித்து அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், `அம்மா வழியில் செயல்படும் அரசு, சிறுபான்மை இன மக்களின்மீது அக்கறைகொண்ட அரசாகத்தான் செயல்படுகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரை கி.மு.,கி.பி என்ற நிலைதான் நீடிக்கிறது' எனத் தெரிவித்தார்.