`துணை வேந்தர் தொடங்கி கடைநிலை ஊழியர் பதவி வரை லஞ்சம்’ - வேல்முருகன் காட்டம்! | velmurugan slams tn govt and admk

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (29/06/2018)

`துணை வேந்தர் தொடங்கி கடைநிலை ஊழியர் பதவி வரை லஞ்சம்’ - வேல்முருகன் காட்டம்!

ல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி சாதாரண அரசு ஊழியர் நியமனம் வரை லஞ்சத்தின் மீதுதான் நடக்கிறது என நாகர்கோவிலில் வேல்முருகன் தெரிவித்தார்.

வேல்முருகன்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நாகர்கோவிலில் தங்கியிருந்து கோட்டாறு காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்துப் போட்டு வருகிறார். 5 வது நாளாக நேற்று கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் தேர்தல் ரீதியாக மக்களைச் சந்திக்க அ.தி.மு.க பயப்படுகிறது. மக்களிடம் ஓட்டு கேட்பதற்கான எந்தச் சாதனையையும் அ.தி.மு.க அரசு செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்கள் பிரச்னைகளைக் கூறி அவர்களால் ஓட்டுகேட்க முடியுமா?

பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி சாதாரண அரசு ஊழியர் நியமனம் வரை லஞ்சத்தின் மீதுதான் நடக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. என்னைப் போன்று மக்கள் உரிமைக்காகப் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்றார்.


அதிகம் படித்தவை