வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (29/06/2018)

கடைசி தொடர்பு:22:40 (29/06/2018)

`ஜெயலலிதா கொள்ளையடித்ததாகப் பேச்சு' - திண்டுக்கல் சீனிவாசன் மீதான வழக்கு ஒத்திவைப்பு

 

உயர் நீதிமன்ற மதுரை  கிளை

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனு அளிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கால அவகாசம் கோரியதால், வழக்கு ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமீபத்தில் மனு அளித்தார். அதில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொள்ளை யடித்த பணத்தைத்தான் டி.டி.வி தினகரன் திருடி வைத்துக்கொண்டு, தற்போது 18 எம்.எல்.ஏ-க்களுக்கும் செலவுசெய்துவருகிறார்' என்று கூறினார். இப்பேச்சு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து அமைச்சர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், அ.தி.மு.க-வில் இருந்துகொண்டே இவர் பேசியிருப்பதால், இவர்மீது சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வேடசந்தூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதால், ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.